சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது புகைபிடிக்கும் காட்சி உள்ளது என தொடங்கிய சர்ச்சை, கதை திருட்டு, பாக்யராஜ் ராஜினாமா என நீண்டது. ஒரு வழியாக படம் திட்டமிடப்பட்டபடி நேற்று (நவம்பர் 6) வெளியானது.
ஆனால் படம் வெளியானாலும் சர்ச்சைகள் மட்டும் குறைந்தபாடில்லை. தற்போது அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
திருப்போரூரில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சர்கார் சர்ச்சை பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, “அப்படத்தில் அரசியல் நோக்கில் சில காட்சிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதுபற்றி மேல்மட்ட ஆலோசனைக்குப் பிறகு சர்கார் படத்தின் தயாரிப்பாளர், நடிகர், திரையரங்கு உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்” என்று பதிலளித்துள்ளார்.
Discussion about this post