சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது புகைபிடிக்கும் காட்சி உள்ளது என தொடங்கிய சர்ச்சை, கதை திருட்டு, பாக்யராஜ் ராஜினாமா என நீண்டது. ஒரு வழியாக படம் திட்டமிடப்பட்டபடி நேற்று வெளியானது.
ஆனால் படம் வெளியானாலும் சர்ச்சைகள் மட்டும் குறைந்தபாடில்லை. தற்போது பலதரப்பிடமிருந்து எதிர்ர்ப்புகள் குவிந்துள்ள நிலையில், கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றொரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
படத்தில் விஜய்யின் பெயர் சுந்தர் ராமசாமி. கார்ப்பரேட் கம்பெனியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அவர் மற்ற நிறுவனங்களை அழிக்கும் பணியில் சிறந்து விளங்குபவராக அறிமுகப்படுத்தப்படுகிறார். இந்தப் பெயர் தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமியை நினைவுபடுத்தும் விதமாக உள்ளதாக மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தான் போகும் இடமெல்லாம் தன் போட்டியாளர்களை அழித்துவிடும் கார்பரேட் கம்பெனி தலைமை அதிகாரியின் பெயரை ‘ சுந்தர ராமசாமி ‘ என்று வைத்திருப்பதன் மூலமாக தன் இலக்கிய ஆசான் சுந்தர ராமசாமியுடன் உள்ள பழைய பகைக்கு இப்போது கணக்கு தீர்க்கிறாரா ஜெயமோகன்? சுந்தர ராமசாமி அப்படித் தன் போட்டி சிறுபத்திரிகைகளை அழித்தாரா என்ன? மேலும் சுந்தர ராமசாமி என்பது பொதுப்பெயரல்ல. அது எழுத்தாளர் சுந்தர ராமசாமியையே குறிக்கும். குட்டி ரேவதி- எஸ்.ராமகிருஷ்ணன் பஞ்சாயத்தின் நீட்சியாக இதை எடுத்துக்கொண்டால் இது கடும் சர்ச்சைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் மற்ற அமைச்சர்களின் கருத்துக்கள் அரசியல் ரீதியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் சட்ட அமைச்சர் தயாரிப்பாளர், நடிகர் மீது வழக்கு தொடுப்பதற்கான மேல்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருவதால் அவர்கள் மீது விரைவில் வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Discussion about this post