இந்த தீபாவளிக்கு தியேட்டர்களில் எல்லாம் விஜய்யின் சர்கார் படம் தான். 3000 க்கும் அதிகமான தியேட்டர்கள் மூலம் படம் வெளியாகியுள்ளது. ஃபிளக்ஸ், பேனர், கட்டவுட் என ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.
கேரளாவில் இப்படத்திற்கு 175 அடியில் பிரம்மாண்ட பேனர்கள் வைத்திருந்தனர். சில நாட்கள் கழித்து அப்பகுதியில் பலத்த காற்று, மழை என்பதால் அதை ரசிகர்களே கழற்றி விட்டனர்.
இந்நிலையில் மலையாள சினிமாவில் இருக்கும் மோகன் லால் ரசிகர்கள் அடுத்து வரவிருக்கும் ஒடியான் படத்திற்காக 200 அடியில் கட்டவுட் வைக்க பிளான் போட்டுள்ளார்கள்.
மேலும் மம்முட்டி ரசிகர்கள் அவரின் நடிப்பில் வெளியாகவுள்ள மதுர ராஜா படத்திற்காக 220 அடிக்கு கட்டவுட் வைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
Discussion about this post