இயக்குனர் முருகதாஸ் இயக்கிய சர்கார் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் வசூலும் அதிகரித்து வருகிறது.
படம் கதை சர்ச்சைகள் நீதிமன்றம் வரை சென்று கடைசியில் எப்படியோ படம் வெளியாகிவிட்டது. இந்நிலையில் தற்போது படத்தின் காட்சிகள் தொடர்பாக வேறு சில சர்ச்சைகளும் எழுந்துள்ளது.
இந்நிலையில் போலிஸார் முருகதாஸை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றதாகவும், ஆனால் விசாரித்த பின் அவர் அங்கு இல்லை என தெரிந்ததும் போலிஸார் திரும்ப வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே இதை தெரிவித்துள்ளது.
ஆனால்சென்னை மாநகர காவல் துறை அவரை கைது செய்வதற்காக அல்ல. அவருக்கு பாதுகாப்பு கொடுக்கவே என தெரிவித்துள்ளது. மேலும் விஷால், முருகதாஸின் கைது நடவடிக்கை எல்லாம் உண்மை இல்லை என கூறியுள்ளார்.
மேலும் இயக்குனர் முருகதாஸும் போலிஸ் பாதுகாப்பு கொடுத்து வருவதை உறுதி செய்துள்ளார்.
Discussion about this post