சர்கார் திரைப்படத்தை பார்த்து தமிழக அரசு அஞ்சுகிறதா என நடிகை வரலக்ஷ்மி ட்விட்டரில் சாடியுள்ளார். சர்கார் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்த நிலையில், குறிப்பிட்ட காட்சிகளை நீக்குவதாக சர்கார் படக்குழு ஒப்புக் கொண்டது. இதையடுத்து மறு தணிக்கை செய்யப்பட்ட இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு பிற்பகலில் இருந்து காட்சிகள் திரையிடப்படுகிறது.
இந்நிலையில், கோமளவள்ளியாக நடித்துள்ள நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கேலியாக தமிழக அரசை விமர்சித்து ட்வீட்டியுள்ளார். அதில், ஒரு படத்தை பார்த்து அஞ்சும் அளவிற்கு தமிழக அரசு வலுவிழந்து இருக்கிறதா? உங்களது பெயரை நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்கள், எதை செய்யக் கூடாதோ அதையே செய்கிறீர்கள். வன்முறையை தூண்டும் விதமான முட்டாள் தனத்தை நிறுத்துங்கள். படைப்பாற்றலுக்கான சுதந்திரத்தை பறிக்காதீர்கள்’ என தெரிவித்துள்ளார்.
Discussion about this post