பாடகி சின்மயி மற்றும் 11 கூறிய பாலியல் புகாரை மறுப்பு தெரிவித்த வைரமுத்து கடந்த மாதம் சென்னையை விட்டு மதுரைக்கு சென்றால் சிறிது நிம்மதியாக இருக்கும் என்று நினைத்து தன்னுடைய நெருங்கிய நண்பர் வீட்டிற்கு சென்றார். அந்த சமயம் உடல்நலக் குறைவு ஏற்ப்பட்டு உடனே அவரை மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர்.
அவரை சோதித்த மருத்துவர்கள் வைரமுத்துவுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது என்று கூறி உடனே தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். பிறகு வீடு திரும்பினார்.இது மட்டும் இல்லாமல் மீண்டும் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்ப்பட்டு விட்டது.
இதன் காரணமாக சென்னையில் உள்ள கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் என்ன காரணத்தினால், என்ன பிரச்சனை என்று இன்னும் கூறப்படவில்லை. மேலும் அது சம்மந்தமான விவரங்கள் வெளிவரவில்லை.
Discussion about this post