விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தில் வில்லி வேடத்தில் வரலட்சுமி நடித்துள்ளார். அவருக்கு கோமளவள்ளி என்று பெயர் வைத்து இருந்தனர். இதற்கு அ.தி.மு.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோமளவள்ளி என்பது முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயர். எனவே அதை நீக்க வேண்டும் என்று கூறினார்கள்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஜெயலலிதாவின் உண்மையாக பெயர் கோமளவள்ளி அல்ல என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறி இருப்பதாவது ஜெயலலிதா பற்றி எனது தந்தைக்கு தான் நன்றாக தெரியும். அவர் அம்மு என்று செல்லப்பெயரில் தான் அழைப்பார். மைசூரில் பிறந்த அவருக்கு ஜெயா என்றுதான் பெயர் சூட்டினார்கள். இவ்வாறு தீபா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் தாயார் இயற்பெயர் வேதவல்லி. அவர் சந்தியா என்ற பெயரில் சினிமாவில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post