தமிழ்சினிமாவில் பாலுமகேந்திரா, ஷங்கர், மணிரத்னம் இப்படிப்பட்ட பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்த ஒரு காலத்து நாயகந்தான் பிரசாந்த். 90ல் வைகாசி பொறந்தாச்சி படத்தின் மூலம் அறிமுகமான பிரசாந்த் இதுவரை சுமார் 50 படங்களில் நடித்திருக்கிறார். 2002ல் ஹரி இயக்குநராக அறிமுகமான தமிழ் படத்துக்குப் பின்னர் பிரசாந்த் கடந்த 16 ஆண்டுகளாக பிடிவாதமாக ஹிட் படம் எதுவும் கொடுக்கவில்லை.
அதுமட்டுமில்லாமல் உலக அழகி ஐஸ்வர்யா ராய் உட்பட பல நட்சத்திரங்களின் ஆசை நாயகனுமாகிய நடிகர்தான் பிரசாந்த். இப்படிப்பட்ட நாயகனான பிரசாந்த் தெலுங்குப் படம் ஒன்றில் ஜூனியர் ஆர்டிஸ்டாக, அதாவது கதாநாயகனுக்கு எடுபிடியாக நடிப்பதாக நடமாடும் செய்தி ஒன்று வெளி வந்துள்ளது. ஆனால் இதுவரை வெளிவந்த படத்தில் பிரசாந்துக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை.
இதைக்கண்டு பிரசாந்தின் ரசிகர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நிலையில், நேற்று வெளியிடப்பட்ட ‘வினய விதேய ராமா’ டீஸரிலும் சும்மா ரெண்டே ரெண்டு ஷாட்களில் பிரசாந்த் ராம்சரனுக்கு பின்னால் நடந்து வந்தார். பிரசாந்த்தின் ரசிகர்கள் டேய் என்னடா ஆச்சு? எங்க தலய ஒரு ஓரமா நிறுத்தி வச்சிருக்கீங்க? அவர் எவ்வளவு பெரிய டாப் ஸ்டார், அவரைப்போய் ஜூனியர் ஆர்டிஸ்டாக்கிட்டீங்க! என்று துவங்கி முகநூல், ட்விட்டர் வலைதளங்களில் தங்களின் பதிவை வெளியிட்டனர்.
Discussion about this post