கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது சினிமாவையே கபளீகரம் பண்ணிய கும்பல்தான் மாறன் சகோதரர்கள்..??? அவர்களுக்காக தானே வரிவிலக்கு அளிக்கப்பட்டது… அவர்கள் கைகளில் தானே தமிழ்நாடு முழுக்க தியேட்டர்கள் இருந்தது ..?!
மொத்த சினிமாவையும் உள்ளங் கையில் வைத்திருந்த அராஜகம் இருந்தது . எல்லாம் மறந்து விட்டீர்களா சினிமா நண்பர்களே..?! ரஜினியோ அல்லது கமலோ அவர்கள் அல்லாத கம்பெனியில் படம் திரைப்படம் நடிக்க முடிந்ததா..???
தமிழ் வளர்த்த கருணாநிதி பேரன்கள்;
‘வ குவாட்டர் கட்டிங்’ என பேரன் படம் எடுக்க, அந்த படத்தின் மூலம் தமிழ் வளர்ந்ததாக பூரித்துப்போய் அரசுக்கு சேர வேண்டிய கேளிக்கை வரியிலிருந்து விலக்கு கொடுத்தார் அந்த பேரனின் தாத்தாவான கருணாநிதி.
வெறும் குவாட்டர் கட்டிங் மூலம்தான் தமிழ் வளருமா? நாங்களும் தமிழை வளர்க்க மாட்டோமா? என போட்டிப்போட்டுக்கொண்டு ‘ரெட் ஜெயண்ட்’ ‘சன் பிச்சர்ஸ்’ ‘கிளவுடு நைன் மூவிஸ்’ என பேராண்டிகள் சினிமாவை சுட்டு படமாக எடுக்க கூட்டமாக கிளம்பிவர ‘அடுத்த வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே’ என அரசாங்க கஜானாவிற்கு வர வேண்டிய கேளிக்கை வரியை தன் பேராண்டிகளுக்கு வரிவிலக்காக தூக்கி கொடுத்துக்கொண்டிருந்தார் பாசக்கார தாத்தா.
அப்படி வரிவிலக்கு வாங்கி கொழுத்த பண முதலைகளில் ஒன்றுதான் சன் பிச்சர்ஸ்சின் கலாநிதி மாறன்.
அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும் இலவச பொருட்கள் பிச்சையாம். அதே மக்களுக்கு சென்று சேர வேண்டிய பணத்தை வரி விலக்காக பெற்ற இந்த எச்சைகளுக்கு பெயர் என்ன?
மக்கள் வரிப் பணத்தில் கொளுத்தவர்கள் :
கோடிகளை கொட்டி படமெடுத்த இந்த கேடிகள் பலநூறு கோடி ரூபாய் மதிப்புடைய மக்களின் வரிப்பணத்தை விழுங்கிவிட்டு மக்களை பிச்சைக்காரர்கள் என பேசும் தைரியத்தை கொடுத்தது அதே மக்களின் மறதிதானே?
சொந்தமாக கார் கூட இல்லாத ஒரு அரசியல்வாதி மு.க.ஸ்டாலின். ஆனால் அவரின் மகன் உதயநிதி கோடிகளை கொட்டி படம் எடுக்கும் சினிமா தயாரிப்பாளர்.
அந்த உதயநிதி தன்னுடைய படத்திற்கு வரிவிலக்கு கொடுக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்திற்கு போனான். கோடி ரூபாய் முதலீட்டில் படம் எடுக்கும் பணக்காரனுக்கு எதற்கு வரிவிலக்கு? இதெல்லாம் ‘பிச்சை’ கணக்கில் வராதா?
இலவசம் துவங்கியவன் யார்…???
இலவசம் என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தமிழகத்தில் திமுகவின் கடைசி ஆட்சி 1996 – 2001 என்றுதான் வரலாறு பதிவு செய்திருக்கும்.
2006ம் ஆண்டில் வீட்டுக்கு வீடு வண்ண தொலைக்காட்சி பெட்டி இலவசமாக தருகிறேன் என சொல்லி வலை விரித்தவர் கேடி பிரதர்ஸ்சின் தாத்தா கருணாதானே?
வெறும் டிவியோடு மட்டுமா அவர் நின்றார்? உச்சகட்டமாக ஆளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கிறேன் என ‘சதுரங்க வேட்டை’ பாணியில் மக்களின் ஆசையை தூண்டிவிட்டார்.இலவசத்தை படம் எடுக்கும் யோக்கியதை மாறன் சகோதரர்களுக்கு உண்டா..???!
அதில் விழுந்த மக்கள்தான் 2006ல் திமுகவை மைனாரிட்டி அரசாக அரியணை ஏற்றினார்கள்.
நிலத்தை கொடுப்பதற்கு பதில் நிலத்தை பிடுங்க ஆரம்பித்தார்கள். ஸ்டாலினே பக்கத்து வீட்டை ஆட்டையப்போட்டு ஆட்சி மாறியதும் அதை திரும்ப கொடுத்ததை பார்த்தோமே?
தாத்தா அரசு பணத்தில் கலர் டிவி கொடுக்க சுமங்கலி கேபிள் விஷன் மூலம் பேரன்கள் மக்களின் காசை தங்கள் வீட்டின் பக்கம் திருப்பி பணத்திலேயே கொழுத்தனர்.
தாத்தா பேரன் பணத்தகராறு;
கொழுப்பெடுத்த நண்டு வலையில் தங்காது என்ற பழமொழிக்கேற்ப , தினகரன் பத்திரிக்கை கருத்து கணிப்பு என்ற பெயரில் சிண்டு முடிய, அந்த சிண்டை தீ வைத்து கொளுத்தினான் அருமை முதல்வரின் மகன் அழகிரி என்ற தீவட்டி தடியன்.
பேரன்களின் வருவாயை தடுக்க , ‘குசேகான் ஃபுரூட்ஸ்& வெஜிடபுள்ஸ்’ என்ற இல்லாத ஒரு காய்கறி கடையிலிருந்து 200 கோடி ரூபாய் கடன் வாங்கி கலைஞர் டிவியை ஆரம்பித்தார் ஆலமரத்து தாத்தா.
அதோடு சேர்த்து அவசர கோலத்தில் அரசு கேபிளை நிறுவினார்.
அலண்டு போன பேராண்டிகள் 600 கோடி ரூபாய் பணத்துடன் சமரசத்துக்கு வர ‘இதயம் இனித்தது, கண்கள் பனித்தது’ காண்டம் முடிவுக்கு வந்தது.
அரசு கேபிளை ஆங்கர் போட்டு நிறுத்திவிட்டு தறுதலை பேராண்டிகளின் சுமங்கலி கேபிளை செந்தமிழ் நாடெங்கும் தறிகெட்டு ஓடவிட்டார் தானைத் தலைவர்.
பேராண்டிகளின் சினிமா புரட்சிக்கு தாத்தா தன் சுறுக்கு பையிலிருந்து பைசாவை எடுத்து தராமல் நைசாக அரசு கஜானாவில் ஓட்டை போட்டு வரிவிலக்கு என்ற பெயரில் வாரி கொடுத்தார்.
பிச்சை எடுத்தே வளர்ந்த கும்பல் :
தினவெடுத்து அதை வாங்கி திண்ற வாய் தற்போது அடித்தட்டு மக்களுக்கு கிடைத்த விலையில்லா பொருட்களை பிச்சை என கேலி பேசுகிறது.
பிச்சையிலும் பிச்சை பெரும்பிச்சை இந்த மாறன் கும்பல். இந்த எச்சைகளை நியாபகப்படுத்த இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் அதற்கு நேரமும் இல்லை துப்பி துப்பி வரண்டு போனதால் வாயில் எச்சிலும் இல்லை.
முட்டாள்கள், இயக்குனர் முருகதாஸ் அவர்களுக்கும் நடிகர் விஜய் அவர்களுக்கும் இதையெல்லாம் சிந்திக்க அறிவே இல்லையா..????!!!
மக்களாகிய நாமும் ஆளுங்கட்சியை திட்டி திரைப்படம் எடுத்துட்டான், இவனுக ரொம்ப நல்லவனுக…..”என்றால், விளங்குமா நாடு..???
இவனுக எல்லாம் மலைமுழுங்கி மகாதேவனுக…. மறந்தவன் முட்டாள்கள் தானே..??? மாற்றம் வேண்டும் , மலம் ஒரு மாற்றம் அல்ல..!!
மக்களை இலவசத்திற்காக கையேந்த வைத்தது நீங்கள்தானடா…???
ரவி சின்னசாமி
Discussion about this post