சர்கார் திரைப்படத்தைத் தொடர்ந்து 2.O திரைப்படத்தையும் தங்கள் இணையதளத்தில் வெளியிட போவதாக தமிழ் ராக்கர்ஸ் ட்வீட் செய்ததாகத் திரையுலகில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆனால், அந்த ட்வீட் தமிழ் ராக்கர்ஸின் அதிகாரபூர்வ ட்வீட் அல்ல. அது போலி ட்விட்டர் ஹாண்டிலில் இருந்து பகிரப்பட்டது என தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் பைரசி தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சர்கார், 2.O பற்றி ட்வீட் செய்ததால் @TamilRockersMV @TamilRockers_ph ஆகிய தமிழ் ராக்கர்ஸின் போலி அக்கவுன்ட்டுகள், அவர்களுடைய அதிகாரபூர்வ கணக்கு @tamilmvoff ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.
உங்கள் தகவலுக்கு – திருட்டு வெப்சைட்டால் படத்தின் HD பதிவைப் படம் வெளியாகும் நாளன்றே பகிர முடியாது. காரணம், படத்தின் ஆன்லைன் பார்ட்னர் அதை இணையத்திலோ அல்லது அப்ளிகேஷனிலோ பதிவேற்றிய பிறகுதான் அதை செய்ய முடியும். எனவே செய்தி ஊடகங்கள் தவறான செய்திகளை ஒரு போலி ட்வீட்டை நம்பி பதிவிட வேண்டாம் எனக் கோருகிறோம். இது திரைப்பட திருட்டையும், தமிழ் ராக்கர்ஸையும் ஊக்குவிக்கும். பைரசியை தடுப்போம்” எனப் பதிவிட்டுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 2.O. இந்தியத் திரையுலகில் அதிகப் பொருட்செலவில் உருவாகியுள்ள படம் இது. சுமார் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தை இணையத்தில் வெளியிட போவதாக தமிழ் ராக்கர்ஸ் மிரட்டியிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதைக் குறிப்பிட்டே தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் திரை திருட்டு தடுப்புப் பிரிவு இந்த ட்வீட்டை பதிவு செய்துள்ளது.
Discussion about this post