96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மணிரத்னம் படத்துக்கு இசையமைக்க உள்ளார். 96 படத்தில் கோவிந்த் வசந்தாவின் இசை சூப்பர் ஹிட்டானது. இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் ஆக உள்ளது. அதிலும் கோவிந்த் வசந்தா இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் மணிரத்னத்தின் அடுத்த படத்துக்கு அவர் இசையமைக்கிறார்.
https://www.instagram.com/p/Bp1pMJSlLJx/?utm_source=ig_web_options_share_sheet
மணிரத்னம் கதை எழுதி, தயாரிக்கும் படத்தை அறிமுக டைரக்டர் தனசேகரன் இயக்குகிறார். இந்த படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள கோவிந்த், மணிரத்னத்தை சந்தித்தபோது எடுத்த படத்தையும் வெளியிட்டுள்ளார்.
Discussion about this post