தெலுங்கில் உருவாக உள்ள புதிய படத்தில் சமந்தா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இதற்கு முன் விக்ரம் நடித்த பத்து எண்றதுக்குள்ள படத்தில் சமந்தா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்துக்கு பிறகு இதில் மீண்டும் இரட்டை வேடம் ஏற்கிறார். இதில் பாட்டி வேடத்துக்காக சமந்தா 70 வயது மூதாட்டி கெட்அப்புக்கு மாற உள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்பதால் இதில் முன்னணி ஹீரோ நடிக்க மாட்டார்கள் என படக்குழு தெரிவித்தது. மிஸ் கிரானி என்ற கொரியன் படத்தின் ரீமேக் ஆக இந்த படம் உருவாக உள்ளது.
மேலும், இப்படத்தின் மையக்கரு என்னவென்றால் போட்டோ சூட் ஒன்றில் 70 வயது பாட்டியாக இருக்கும் சமந்தா புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது 20 வயது இளம் பெண்ணாக மாறிவிடுவாராம். அதற்கு பிறகு நடக்கும் மர்மங்கள் நிறைந்த திருப்பங்களே படத்தின் சுவாரஸ்யம். இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு சமந்தா இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். ஆதலால் இந்த படத்தின் மூலமாக ஒரு வித்தியாசமான சமந்தாவை பார்க்கலாம் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post