பாகுபலி 2 படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு ராஜமெளலியின் அடுத்த படம் என்ன என்பதே திரையுலகினர், ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. அவரது அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் துவக்க விழா பூஜையுடன் நேற்று துவங்கியது. ஐதராபாத்தில் உள்ள அலுமினியம் பேக்டரியில் பூஜை நடந்தது. சிரஞ்சீவி படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, பிரபாஸ், ராணா, தயாரிப்பாளர் தனய்யா உள்பட பலர் பங்கேற்றனர். இந்த படத்தை 2020 ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ‘11ம் தேதி 11வது மாதத்தில் பகல் 11.11 மணிக்கு படம் துவங்கப்படும்’ என டிவிட்டரில் ராஜமெளலி அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று பட விழா துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராஜமெளலி, ராமா ராவ், ராம் சரண் என மூவரின் பெயருமே ‘ஆர்’ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்குவதால், தற்போதைக்கு இந்தப் படத்துக்கு ‘ஆர்ஆர்ஆர்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாகுபலி’ நாயகர்கள் பிரபாஸ் மற்றும் ராணா டகுபதியும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 19-ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post