உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் முக்கியமான கேரக்டரின் ஸ்டைலிஷ் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கவிருக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கேரக்டரில் துல்கர் சல்மான் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக நயன்தாரா ‘இந்தியன் 2’ நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், கமல்ஹாசனை தவிர மற்ற கதாபாத்திரங்கள் குறித்த எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே, மக்கள் மனதில் இந்தியன் தாத்தாவாக இன்றளவும் வாழ்ந்து வரும் சேனாபதியாக மீண்டும் வர நடிகர் கமல்ஹாசன் மனதளவிலும், உடல் அளவிலும் தன்னை தயார்படுத்தி வருகிறார். அமெரிக்க பயிற்சியாளர் கண்காணிப்பில் சவாலான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
Discussion about this post