‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதைத் தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களையும் இயக்கி வெற்றி இயக்குநராகவும், இயக்குநர் மட்டுமின்றி பாடலாசிரியராகவும் வலம் வருகிறார். கிரிகெட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவருக்கு மகேந்திர சிங் தோனியை மிகவும் பிடிக்கும். சமீபத்தில் நடைபெற்ற டி20 தொடரில் தோனி பெயர் இடம்பெறாததற்கு பிசிசிஐ-க்கு கண்டனம் தெரிவித்திருந்தார். திரையுலகில் பலரும் அஜித்தை தல என்று அழைக்கும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் வேறு ஒருவரை தல என்று அழைக்கிறார்.
https://twitter.com/VigneshShivN/status/1061247702309134337
அவர் மட்டுமல்ல கிரிக்கெட் ரசிகர்களும் அவரை அப்படித்தான் அழைக்கிறார்கள். விளையாட்டு துறையில் உள்ள அந்த தல வேறுயாருமல்ல டோனிதான். இணைய தளங்களில் டோனியை கொண்டாடும் ரசிகர்கள் தல என்றே குறிப்பிடுகின்றனர். தோனியை சந்தித்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “எனது வாழ்நாள் கனவு நனவாகிவிட்டது. தல தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட தருணம் எனது வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. இந்த அதிசயத்தை நடக்க வைத்த கடவுளுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
Discussion about this post