‘தமிழகத்தில் இந்தியை திணித்து வரும் பாஜவை எதிர்க்கவே கட்சி துவங்குகிறேன்’ என சென்னையில் திரைப்பட இயக்குனர் கவுதமன் தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் நேற்று அவர் பேட்டியளிக்கையில், ‘‘தமிழ் இனத்தை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறோம்.
ரஜினி கட்சி ஆரம்பித்து எங்கு போட்டியிடுகிறாரோ, அங்கு அவரை எதிர்த்து நாங்கள் போட்டியிடுவோம். வரும் தை பொங்கலுக்கு பிறகு மாநாடு நடத்தி, கட்சியின் கொள்கை, பெயர், கொடி அறிவிக்கப்படும். தமிழுக்கு மேல் எதற்கு இந்தி எழுதப்படுகிறது. எங்களது பாரம்பரியத்தையும், மொழியையும் சீர்குலைக்க நினைத்தால், நாங்கள் எதிர்ப்போம். அதற்காகவே கட்சி ஆரம்பிக்கிறோம்’’ என்றார்.
Discussion about this post