சமீபத்தில் புளுவேல் என்ற விளையாட்டு காரணமாக, பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இதுகுறித்து டைரக்டர் ரங்கநாதன் கூறும் போது, ‘இன்று தனிநபர் வாழ்க்கையில் பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி கொடுக்கக்கூடிய சூழ்நிலைகள்தான் நிலவுகிறது. இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல செயல்களை செய்கிறார்கள். அதில் ஒன்று, புளுவேல் விளையாட்டு.
ஆனால், இந்த விளையாட்டால் சிலர் தங்கள் உயிரையே இழந்து விடுகின்றனர் என்பது பரிதாபத்துக்குரிய விஷயம். அதை மையமாக வைத்து உருவாகும் படம், புளுவேல். காவல்துறை உதவி ஆணையாளர் கேரக்டரில் பூர்ணா, சிறுவனாக மாஸ்டர் கபீஷ் கன்னா, அவனது பெற்றோர்களாக பிர்லா போஸ், திவ்யா நடித்துள்ளனர்’என்றார்.
Discussion about this post