பெருகிவரும் தனது இன்ஸ்டகிராம் ஃபாலோயர்களால் ரொம்பவே ஹேப்பி மோடில் இருக்கிறார் நடிகை அமலா பால்.
குறைவான கிளாமர், பக்கத்து வீட்டுப் பெண்ணைப் பிரதிபலிப்பது மாதிரியான ஒரு தோற்றம் எனத் தனது தொடக்கக் காலப் படங்களில் நடித்துவந்தவர் நடிகை அமலா பால். மளமளவென படங்களில் நடித்துவந்த நிலையில் நடுவிலே தனது படங்கள் வெளிவருவது கணிசமாகக் குறைந்து, சிறிது காலம் தனது திரைப்பயணத்தில் ஒரு சின்ன சறுக்கலைச் சந்தித்தார் அமலா பால்.
பின்னர் சுதாரித்துக்கொண்ட அமலா பால் தனது இருப்பை நிலைநிறுத்தும் விதமாகப் பல படங்களில் தற்போது தொடர்ச்சியாக நடித்து வருகிறார். போலவே கிளாமரிலும் கவனம் செலுத்திவருகிறார். அவரது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகும் புகைப்படங்கள், போட்டோஷூட் புகைப்படங்களைப் பார்த்தாலே இது அந்த அமலா பால் இல்லை இது வேற லெவல் அமலா பால் எனத் தெரிந்துகொள்ளலாம்.
விஷ்ணு விஷாலுடன் இணைந்து ராட்சசன் படத்தில் சமீபத்தில் நடித்திருந்த இவர், தனது அடுத்த பட வெளியீட்டுக்காகத் தற்போது காத்திருக்கிறார். சமூக வலைதளங்களில் இயங்கிவரும் அமலா பால் அவ்வப்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும், கருத்துகளையும் வெளியிட்டுவருவார். அதையொட்டி நாளுக்கு நாள் அவரது ஃபாலோயர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. அந்த வகையில் தற்போது 2 மில்லியன் எனும் அளவுக்கு ஃபாலோயர்களை உருவாக்கியுள்ளார் அமலா பால்.
இந்த நிலையில் இன்ஸ்டகிராமில் இதுகுறித்து தற்போது பதிவு ஒன்றை இட்டுள்ள அவர் அப்பதிவில்,
“2 மில்லியன் இன்ஸ்டகிராம் ஃபாலோயர்களைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருந்துவரும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. இது தொடரட்டும். அனைவருக்கும் எனது அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனும் தொனியில் குறிப்பிட்டுள்ளார் அமலா பால்.
Discussion about this post