பல சர்ச்சைகளுடன் தீபாவளி அன்று வெளியிடப்பட்ட விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று பல இடங்களிலும் வசூல் செய்து வெற்றியை பெற்றுள்ளது. ஆனால் 4 காட்சிகள் துண்டிக்கப்பட்டதால் முன்பு இருந்த வரவேற்பை விட இப்போது இந்த படத்திற்கு சற்று வரவேற்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு திரைப்படம் பார்த்தால் அதிலுள்ள நல்லதை எடுத்து கொள்ளாமல் கண்மூடி தனமாக பல ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அதேப்போல்தான் தங்கள் வீட்டில் இருந்த , இலவச பொருட்கள் மிக்சி கிரைண்டர் போன்றவற்றை உடைத்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.
இவ்வாறுதான் தங்களின் ஆதரவை தெரிவிக்க வேண்டுமா? மேலும் திரைப்படத்தில் வருவதை போலவே தங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டுமா? திரைப்படத்தில் உள்ள காட்சிகளை போல் செய்தது மட்டுமில்லாமல் அர்சாங்கம் இலவசமாக தந்த வீட்டினையும் ரசிகர் ஒருவர் ஒரு படி மேலே சென்று உடைக்கிறார் என கூறி ஒரு வீடியோ வெளியாகி பார்ப்பவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் இதிலும் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. இது உண்மையாகவே விஜய் ரசிகர் வீட்டை உடைக்கும் காட்சியா அல்லது வேறு ஏதாவது பணிக்காகதான் வீடு உடைக்கப்படுகிறதா என உண்மை தகவல் வெளியாகவில்லை.
Discussion about this post