திறமையான இயக்குநர் பாலா. அவரது திரைப்படமான அவன் இவன்’ படத்தில் ஜமீன்தார்கள் குறித்து அவதூறான காட்சிகள் சில வைத்திருந்தார். இது தொடர்பான வழக்கு எட்டு வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது.
இத்திரைப்படத்தில் விஷால் மற்றும் ஆர்யா நடித்துள்ளனர். ‘அவன் இவன்’ என்ற படத்தை 2011ல் இயக்கியிருந்தார் இயக்குனர் பாலா. இப்படத்தில் ஜமீன்தார்கள் தரைமட்டத்துக்கு கிண்டலடிக்கப்பட்டார்கள். இதன் காரணமாக, தீர்த்தப்பட்டி ஜமீனின் வாரிசான சங்கர் ஆத்மஜன் இயக்குநர் பாலா மீதும் நடிகர் ஆர்யா மீதும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கில் ஆஜராகாமல் பாலாவும் ஆர்யாவும் பலமுறை எஸ்கேப் ஆகிவந்த நிலையில் இருவர் மீதும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அம்பாசமுத்திரம் வந்திருந்த பாலா நீதிபதி முன்னிலையில் ஆஜராகி வக்கீல்கள் மூலம் தன் தரப்பு விளக்கத்தை அளித்தார்.
Discussion about this post