நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். விஷ்ணு விஷால் இயக்குநர் கே. நட்ராஜின் மகள் ரஜினியை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2017ம் ஆண்டு ஆர்யன் என்ற மகன் பிறந்தான். இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நானும் ரஜினியும் கடந்த ஓராண்டாக பிரிந்து தான் வாழ்ந்து வருகிறோம். தற்போது நாங்கள் முறையாக விவாகரத்து பெற்றுக் கொண்டோம். எங்களுக்கு மகன் இருக்கிறான். அவனை சேர்ந்து வளர்ப்பதில் தான் நாங்கள் முழு கவனமும் செலுத்தி வருகிறோம். இனியும் நாங்கள் நல்ல நண்பர்களாக ஒருவருக்கு ஒருவர் மதிப்பளித்து வாழ்வோம். எங்களது குழந்தை மற்றும் குடும்பத்திற்காக எங்களது தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Discussion about this post