தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படும் ஒரு இணையதளம், தமிழ் ராக்கர்ஸ். புதிய தமிழ் படங்கள் திருட்டுத்தனமாக தமிழ் ராக்கர்ஸில் பதிவேற்றப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. பல வருடங்களாக முயற்சித்தும் இந்த தளத்துக்கு பின்னால் செயல்படுபவர்களை பிடிக்கவோ, தளத்தை முடக்கவோ முடியவில்லை. சமீபத்தில், விஜய் நடித்து வெளிவந்த ‘சர்கார்’ படத்தை ‘ரிலீஸ்’ அன்றே வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில், ஒரு சவால் விடப்பட்டது.
சொன்ன மாதிரியே ‘சர்கார்’ படம் ரிலீஸ் அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது, தமிழ் பட உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் ‘2.0’ படத்தையும் ரிலீஸ் அன்றே வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில் சவால் விடப்பட்டு இருக்கிறது.
தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் உருவாகி இருக்கும் ‘டாக்ஸிவாலா’ திரைப்படத்தை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். இப்படம் தெலுங்கில் வரும் நவம்பர் 17ம் தேதிதான் வெளியாக இருக்கிறது. அதற்குமுன்பே இணையதளத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய் தேவரகொண்டா தமிழ் மற்றும் தெலுங்கில் மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் இவருடைய நடிப்பில் ‘நோட்டா’ திரைப்படம் தமிழில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post