ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2. இத்திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடிப்பதாக சொல்லப்படும் நிலையில், சிம்புவும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வந்தா ராஜாவாதான் வருவேன், மாநாடு, கௌதம் மேனனுடன் கூட்டணி என கலக்கப் போகிறார். இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு அணுகியதாகவும், கமல்ஹாசனை குருவாக நினைப்பதால் சிம்பு அதற்கு ஒத்துக்கொள்வார் என்று படக்குழு நம்பிக்கையோடு இருப்பதாகவும் தகவல் பரவுகிறது.
Discussion about this post