எம்.ஐ.டி.யில் படிக்கும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் நடந்த மெடிக்கல் எக்ஸ்பிரஸ் 2018 யுஏவி சேலஞ்ச் போட்டியில் கலந்து கொண்டு ஆளில்லா விமானத்தை இயக்கி 2வது பரிசு பெற்றனர். அந்த ஆளில்லா விமானத்தை உருவாக்கிய தக்ஷா குழுவுக்கு அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் தற்போது மீண்டும் எம்.ஐ.டி.க்கு சென்று ஆளில்லா விமானத்தை இயக்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.அஜித்தின் வழிகாட்டுதலின்பேரில் தக்ஷா குழு ஏர் டாக்சியை வடிவமைத்துள்ளது.
எம்.ஐ.டி.யில் அஜித்துடன் சேர்ந்து ஏராளமான மாணவர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். ட்விட்டரில் அஜித் புகைப்படங்கள் தான் அதிக அளவில் வலம் வருகின்றது.
அஜித்தின் வழிகாட்டுதலின்பேரில் நடந்துள்ள சாதனை புகைப்படத்தை பார்த்து திரையுலக பிரபலங்களும் பெருமை அடைந்துள்ளனர்.
Discussion about this post