சசிகுமார் நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சுந்தரபாண்டியன். வித்தியாசமான கதை கண்ணோட்டத்தில் அனைவரின் பார்வைக்கு விருந்தாகவும் இருந்த திரைப்படம்தான் சுந்தரபாண்டியன். இத்திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் சசிகுமார் கூட்டணியில் உருவாகும் படம் கொம்பு வச்ச சிங்கம்டா. சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்தான் கொம்பு வச்ச சிங்கம்டா. இப்படத்தின் வேலைகள் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது.
இத்திரைப்படத்தில் மடோனா செபாஸ்டியன் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஹரிஷ் பரேடி மற்றும் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குனர் மகேந்திரன் ஒரு கொடூரமான கதாபாத்திரத்திலும், இப்படத்தின் தயாரிப்பாளர் இந்திரக் குமார் வில்லன்களில் ஒருவராகவும் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் பொள்ளாச்சிப் பகுதிகளில் நடக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டத்தில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். என்னை நோக்கி பாயும் தோட்டா, ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்களில் நடித்த பிறகு சசிகுமார் நடிக்கும் படம் இதுவாகும். மேலும் இத்திரைப்படத்தில் சுந்தரபாண்டியன் படத்தின் சசிகுமார் கதாபாத்திரம் அப்படியே தொடரும் என சொல்லப்படுகிறது.
Discussion about this post