இந்திய சினிமா வரலாற்றில் அதிக பட்ஜெட் செலவில் தயாராகியிருக்கும் படம் 2.O. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்தப் படம் 2010ஆம் ஆண்டு வெளியான எந்திரன் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். ஏமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர்கள் அடில் ஹூசைன், சுதான்ஷு பாண்டே, கலாபவன் சஜோன், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா ராய் ஸ்பெஷல் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், 2.O பாடல்கள், டீஸர், டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து படம் தற்போது சென்சார் செய்யப்பட்டுள்ள நிலையில், ‘யு/ஏ’ சான்று வழங்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் 2.0, ஏற்கனவே திட்டமிட்டபடி இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மும்மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
Discussion about this post