ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில், அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜோதிகாவின் கதாபாத்திரங்கள் எல்லாம் பெண்கள் மனதை ஈர்க்கும் படியாகத்தான் உள்ளது. அப்படித்தான் இந்த திரைப்படத்திலும் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். டீச்சர் கதாபாத்திரம் என்றாலே தனியாக தெரியும் ஒரு கெத்தான கதாபாத்திரம்தான்.
மேலும் ஜோதிகா டீச்சராக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. அதில் சிவகுமார், சூர்யா, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ராஜ் இயக்க உள்ளார். அதற்காக சென்னையில் ஒரு பள்ளியில் செட் போடப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரமே படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
Discussion about this post