தமிழ் சினிமாவை 80-களில் ஆட்கொண்டிருந்த முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்துள்ளனர். தமிழ் சினிமா நாகரிக வளர்ச்சி பெற்று கலர் வடிவங்களில் புதுப்புது தொழில்நுட்பங்களுடன் மெறுகேற்றிக் கொண்ட ஆண்டுகளாக 80-களை குறிப்பிடலாம். அந்த காலகட்டத்தில் தான், இன்றளவும் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களாக அறியப்படும் பலர் அறிமுகம் செய்யப்பட்டனர்.
இசை, ஒளிப்பதிவு, இயக்கம், வசனம், புதுமுக நடிகர்கள் என முற்றிலும் புதிய கோணத்திற்கு தமிழ் சினிமாவை கொண்டு சென்ற காலகட்டமாக அது அறியப்படுகிறது. அந்த வகையில், அப்போது உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்த பாக்யராஜ், சத்யராஜ், சரத்குமார், அர்ஜுன், குஷ்பு, ராதா, பூர்ணிமா பாக்யராஜ், நதியா, சுஹாசினி, அம்பிகா, ஜெய்ராம், மேனகா போன்ற நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து கூடி பேசி மகிழ்ந்துள்ளனர்.
Discussion about this post