இந்த போஸ்டரில் ரஜினியும், சிம்ரனும் இளமையாக, அழகாக உள்ளனர். பேட்ட போஸ்டரில் ரஜினியும், சிம்ரனும் சந்தோஷமாக நடந்து வருவது போன்று உள்ளது. பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. பின்னர் ஒரு மாத இடைவெளியில் ரஜினி நடித்த இரண்டு படங்கள் வெளியாவதை தயாரிப்பு நிறுவனம் விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் பேட்ட படம் பொங்கலுக்கு வருவது உறுதியாகியுள்ளது.
பேட்ட புதிய போஸ்டரில் ரஜினி மிகவும் இளமையாக தெரிகிறார். அவருக்கு வயசே ஆகவில்லை என்கிறார்கள் அவரின் ரசிகர்கள். மேலும் பேட்ட பட போஸ்டரை பார்த்த சிம்ரன், அடடே இது நிஜமாகவே நடக்கிறதா என்பதை நம்ப முடியாமல் சிம்ரன் தன்னை தானே கிள்ளிக் கொண்டுள்ளார். இதனால் மேலும் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அனிருத் பேட்ட பட போஸ்டரை பார்த்து பேட்ட பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். த்ரிக்ஷாவும் சிம்ரன் அழகாகவும், இளமையாகவும் இருப்பதாக தெரிவித்தார்.
வயசானாலும் உன் அழகும் திமிரும் குறையாது என்பதற்கு இணங்க ரஜினியின் அழகும் இளமையையும் பேட்ட படத்தின் போஸ்டரில் காண்பிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post