8 கி.மீ வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 14 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளது. கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் நெருங்குவதால் கடலூர், பாம்பனில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக கஜா வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு அருகே 370 கி.மீ தொலைவிலும், நாகைக்கு அருகே 370 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது கஜா புயல்
Discussion about this post