சினிமாவில் இருந்து அரசியலில் குதிப்பது சுலபமாகிவிட்டது. அப்படிதான் தெலுங்கு நடிகையான ரேஷ்மா ரத்தோர் தெலுங்கானா கம்மாம் மாவட்டத்தின் வைரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடவுள்ளார். ரத்தோர் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர்தான் தெலுங்கு நடிகை மற்றும் கவர்ச்சி நடிகையான ரேஷ்மா ரத்தோர்.
மேலும் இவர் தெலுங்கு படங்களில்தான் அதிகமாக நடித்துள்ளார். தமிழ் படங்களை விடவும் தெலுங்கில்தான் கலக்கியவர். இப்போது அரசியலில் கலக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். அதற்காகதான் வைரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதற்கு முன்னரே ஆந்திரா, தெலுங்கான அரசியலில் நடிகைகள் விஜயசாந்தி, ரோஜா, வாணி விஸ்வநாத் போன்றவர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அவர்களை போல சமீபத்தில் கவர்ச்சி நடிகை ரேஷ்மாவும் அரசியலில் குதித்தார்.
தெலுங்கு நடிகையான ரேஷ்மா அரசியலில் குதித்த நேரம் தேர்தல் காலமாக இருந்ததால் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. பா.ஜவில் இணைந்திருக்கும் ரேஷ்மாவுக்கு தெலுங்கானாவில் உள்ள வைரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. படங்களில் கிளாமர் ஹீரோயினாக நடித்து வரும் ரேஷ்மா அரசியல்வாதியாகி இருப்பதால் அதற்கென பிரத்யோகமாக போட்டோக்கள் எடுத்து வருகிறார். தெலுங்கானா பெண்கள் பாணியில் சேலை உடுத்தி கையை அசைப்பது போலவும், கரம் கூப்பி வணக்கம் சொல்வது போலவும் படங்கள் எடுத்துள்ளார்.
Discussion about this post