நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்நிலையில் விஜய் தனது அடுத்தப் படத்திற்கான வேலைககளில் இறங்கியுள்ளார்.
விரைவில் விஜய் 63 படத்திற்காக விஜய் லுக் டெஸ்ட் மற்றும் போட்டோஷூட் நடக்கவுள்ளது என்று கூறப்படுகிறது. மீண்டும் விஜய், அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணையவுள்ளது.
இந்த படத்தில் ஹீரோயினாக யார் நடிப்பார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ள நிலையில் நயன்தாரா அல்லது சமந்தா இருவரில் ஒருவர் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதிலும் சமந்தா தேர்வாக அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post