இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில், மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘எந்திரன்’. இத்திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது. வசூலிலும் பெரிய வெற்றியை கண்டது. ஆடம்பரமான செலவில் பிரம்மாண்டத்துடன் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘எந்திரன்’.இத்திரைப்படத்தினை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது
ஷங்கர் இயக்கத்தில் உருவாகிய 2.0 திரைப்படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வருகின்ற 29ம் தேதியில் இப்படம் வெளியாகவுள்ளது. மேலும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
கடந்த 12ம் தேதி முதல் தமிழகத்தில் இப்படத்திற்கான திரையரங்குகள் புக்கிங் செய்யப்படுவது தொடங்கியுள்ளது. உள்ளூர் விநியோகஸ்தர்கள் மூலம் தயாரிப்பு நிறுவனம் சொந்தமாக இப்படத்தை வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு தமிழகத்தில் அதிகப்படியான திரையரங்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிக வசூலிலும் முதல் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post