இந்தியில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தும்ஹாரி சுலு’ படத்தின் தமிழ் மறுஆக்கமான ‘காற்றின் மொழி’ படத்தில் நடித்திருக்கிறார் ஜோதிகா. ராதாமோகன் இயக்கத்தில் காற்றின் மொழி படத்தில் நடித்த ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்துவருகிறார்
ஜோதிகா, காற்றின் மொழி திரைப்படத்தில் சொல்லப்பட்டு இருக்கும் மெசேஜ் பிடித்திருந்ததாலும், பெண்களை மையப்படுத்தி நகரும் படங்கள் கனமான உள்ளடக்கத்துடன் இருக்கும் என்பதினாலும், கணவன் – மனைவி உறவை அழகாகச் சொல்லியிருக்கும் படம் என்பதினால் இத்திரைப்படத்தில் ஒப்பு கொண்டேன் என்று கூறியுள்ளார். பெண்களுக்கு உறுதுணையாக இருக்கும் கணவன்மார்களைப் படத்தில் காட்டியிருக்கிறோம்.
10 வருடங்களுக்கு முன்பு பாலியல் துன்புறுத்தல், சாதியக் கொலைகள் எல்லாம் சமூகத்தில் நிகழவில்லை. இப்போது அதைச் சார்ந்த கதைகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். படங்களில் மனைவி கதாபாத்திரத்தில் நடிப்பதே பயோபிக் மாதிரிதான். தற்போது வீட்டிலிருக்கும் பெண்கள் ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையும் பயோபிக்தான். நல்ல கதைகள் வந்தால், அந்தக் கதாபாத்திரத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய நான் தயார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் சூர்யா பற்றி ஜோதிகா, படங்களில் இருவருமே இணைந்து நடிக்கக் காத்திருக்கிறோம். இதுவரை யாருமே எங்களை அணுகவில்லை. நிஜவாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்தவர்கள், திரையில் காதலித்து நடிப்பதை இயக்குநர்கள் விரும்புவதில்லை என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Discussion about this post