கஜா புயல் கரையைக் கடக்கும் போது 7 மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க வேண்டாம் என போக்குவரத்து துறைக்கு வருவாய்த்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கஜா புயல் இன்று இரவு 8 – 11 மணிக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த சமயத்தில் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அந்த 7 மாவட்டங்களிலும் இன்று மாலை 6 மணியிலிருந்து நாளை காலை 6 மணி வரை தனியார் மற்றும் அரசு பேருந்துகளை இயக்க வேண்டாம் என தமிழக அரசு சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. புயலினால் ஏற்படும் சேதங்களை குரைப்பதற்காகவே இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
Discussion about this post