கஜா புயலின் வெளி விளிம்பு கரையை தொட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு, தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், காரைக்கால், நாகை செல்லும் அரசு பேருந்துகள் கிழக்கு கடற்கரை சாலையை தவிர்த்து, பைபாஸ் சாலை வழியாக செல்ல அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியது. தற்போது அதனையும் நிறுத்தியுள்ளது.
கஜா புயல் கரையை கடக்கும் வரை புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கப்படாது என்றும் புதுச்சேரியில் இருந்து சென்னை மற்றும் காரைக்காலுக்கு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது என்று புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பேருந்து சேவை நிறுத்தப்பட்டதையடுத்து பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை ஆகிய பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பல்கலைக்கழகம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாளை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post