தமிழக மக்கள் அனைவரும் அச்சுறுத்தும் விஷயமாக தற்சமயம் மாறியிருக்கிறது கஜா புயல். வங்க கடலில் உருவான இந்த புயல் தமிழகத்தின் கடலூர்- நாகை மாவட்டங்களுக்கு இடையே இன்று இரவு (15.11.2018) கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயலில் இருந்து மக்களை பாதுக்காக்க தமிழக அரசும் பலவித முன் ஏற்பாடுகளை செய்துள்ளது. அவசர உதவி எண்களும் விளம்பரப் படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கஜா ஆபத்திலிருந்து மக்களை பாதுகாக்க நாகை விஜய் ரசிகர் மன்றத்தினர் மீட்புபணியில் இறங்கியுள்ளனர். இதற்காக அந்தெந்த பகுதிகளில் உள்ள தங்களது ரசிகர் மன்றங்களின் விஜய் ரசிகர் மன்றத்தினர் அவசர கால தொலைப்பேசி எண்களை வெளியிட்டுள்ளனர்.
Discussion about this post