காவிரி தாய்க்கு 325 அடி உயர சிலை வைக்க கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் ரூ. 1200 கோடி செலவில் காவிரி தாய்க்கு 325 அடி உயர சிலை வைக்க அம்மாநில கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.
இச்சிலை வளாகத்தில் அருங்காட்சியகம் மற்றும் 360 அடி உயர கண்ணாடி கோபுரம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் வழியாக கிருஷ்ணராஜசாகர் அணையின் முழுதோற்றத்தை பார்வையிட மடியும்.
தனியார் பொது அமைப்பின் பங்களி்ப்பை எதிர்பார்த்து கர்நாடக அரசு அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும், இதன் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
எய்ம்ஸ் ஹாஸ்பிட்டல் கட்ட 5 பைசா ஒதுக்கல….சிலையை கட்டி என்னடா பண்ணபோறிங்க.
Discussion about this post