கஜா புயல் காரணமாக கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளையும (நவ.,16) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.
நாகப்பட்டினம் பள்ளி,கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை, காரைக்குடி அழகப்பா, திருச்சி பாரதிதாசன், அரியலூர் அரசு மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி பல்கலைகழகங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவக்கப்பட்டுள்ளது.
Discussion about this post