வங்க கடலில் உருவான கஜா புயலால் 7 மாவட்ட மக்கள் கதிகலங்கி போயுள்ள நிலையில், சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மானாமதுரை ஜங்ஷனிலேயே நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதை அடுத்து நேற்று சென்னையிலிருந்து கிளம்பிய சேது எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் மெயில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று (15 ம் தேதி) காலை மானாமதுரை ஜங்ஷனிலேயே நிறுத்தப்பட்டன. ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் பேருந்து மூலம் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Discussion about this post