விஜய்யின் நடிப்பில் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் தான் குஷி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார்.
முழுக்க காதலை கருவாக கொண்ட இப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. இந்நிலையில் காற்றின் மொழி படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிசியாக இருந்த ஜோதிகா பத்திரிக்கையாளர்களுக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார்.
அப்போது, ஏற்கனவே நான் நடித்திருந்த குஷி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்படுகின்றன. அவ்வாறு உருவானால் அதிலும் நான் கட்டாயம் நடிப்பேன்.
ஆனால் நான் ஏற்கும் அந்த கதாபாத்திரம் முதிர்ச்சியுடனும், புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்வது போல் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அம்மா கேரக்டரா….அக்கா கேரக்டரான்னு ஓபன்னா சொன்னாதான தெரியும்…. வெறுமனே முதிர்ச்சின்னா எப்படி புரியும் என்று ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.
Discussion about this post