கஜா புயல் காரணமாக 20 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான கற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்றுடன் 5 அடிக்கு மேல் அலைகள் எழும்பியது. மேலும் பலத்த சூறைக்காற்று வீசியது. மரங்கள் சாய்ந்தன.
பல்வேறு பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இன்னும் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக உள்ள தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
நாகை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், புதுச்சேரி, காரைக்கால், தேனி, மதுரை ஆகிய மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
விருதுநகர், கோவை, ஈரோடு, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
Discussion about this post