ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு முன்பாக, இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து தொடரில் பெற்ற தோல்வியின் மூலம் நிறைய கற்றுள்ளோம். உண்மையில் அந்த தொடரில் நாங்கள் சிறப்பாகவே விளையாடி இருக்கிறோம்.
அதே போல தவறுகளையும் அதிகம் செய்து விட்டோம். தற்போது நமது அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது. பேட்டிங்கில்தான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் சிறப்பான பங்களிப்பை தர வேண்டியது அவசியம். குறிப்பாக பேட்ஸ்மேன்கள். இந்த விஷயத்தில் ஆஸ்திரேலிய தொடரில் கவனம் செலுத்துவோம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடுகளத்தில் நாங்கள் எந்த வீண் வம்புக்கும் செல்ல மாட்டோம். அதே நேரத்தில், வம்புக்கு இழுத்தால் சும்மாவும் இருக்க மாட்டோம். எந்த மாதிரியான வகையில் அவர்கள் விளையாடுகிறார்களே அதே போன்ற பதிலடியை தாங்கள் தருவோம். போட்டியின் மீது கவனம் செலுத்தி, எங்களின் ஆற்றலை இழக்கக் கூடாது என்பதில் கவனமுடன் இருப்போம்.
எங்களின் முக்கிய இலக்கு வெற்றி தான். பக்குவப்படாத இளம் வயதில் நானும் சில தவறுகளை செய்துள்ளேன். களத்தில் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் ஆக்ரோஷப்பட்டுள்ளேன். சீண்டியிருக்கிறேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தற்போது அணியின் கேப்டனாக, எந்த நிலையிலும் அணியின் நலனைத்தவிர வேறெதையும் நினைத்துக் பார்க்க முடியாது. தற்போது பக்குவப்பட்டுள்ளதால் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்.
Discussion about this post