கஜா புயல் கொடைக்கானலுக்கு அருகே மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கஜா புயல் தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினம் அருகே முழுவதுமாக கரையை கடந்துள்ளது. நாகையில் 100 கி.மீ., ம் காரைக்காலில் 92 கி.மீ., வேகத்திலும் காற்று வீசி உள்ளது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 111 கி.மீ., வேகத்தில் காற்று வீசி உள்ளது. அதிராம்பட்டினத்தில் 100 முதல் 110 கி.மீ., வேகத்தில் கஜா புயல் கரையை கடந்துள்ளது. அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 16 செ.மீ., மழைபெய்துள்ளது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, கடலூரில் 14 செ.மீ., மழை பெய்துள்ளது.
நாகையில் 6 செ.மீ., புதுச்சேரி மற்றும் கடலூரில் 5 செ.மீ.,ம் மழை பதிவாகி உள்ளது.
கஜா புயலால் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. முழுவதுமாக கரையை கடந்துள்ள கஜா காலை 11 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என அறிவிக்கப்பட்டது.
காலை 8.30 மணி நிலவரப்படி, அதிராம்பட்டினத்திற்கு 92 கி.மீ., தூரத்திலும் கொடைக்கானலுக்கு 110 கி.மீ., தூரத்திலும் கஜா மையம் கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post