மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர், அஜய் பிராமல், தன் வருங்கால மருமகளுக்கு, 452 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களாவை, திருமண பரிசாக வழங்குகிறார்.
மும்பையைச் சேர்ந்த முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான, அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும், அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இந்நிலையில், ஆனந்த் – இஷா திருமணத்திற்குப் பின் வசிப்பதற்கு, மும்பையின் வொர்லி பகுதியில், கடற்கரையை நோக்கிய ஆடம்பர பங்களாவை, அஜய் பிராமல், பரிசாக வழங்குகிறார்.
ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் பயிற்சி மையமாக இருந்த, ‘குலீட்டா’ என்ற இந்த கட்டடத்தை, 452 கோடி ரூபாய்க்கு வாங்கிய அஜய், அதில் மாற்றங்கள் செய்து வருகிறார்.ஐந்து மாடிகளை உடைய இந்த கட்டடத்தில், மூன்று அடித்தளங்கள் உள்ளன. ஒரு அடித்தளத்தில், புல்தரை, திறந்தவெளி நீர் ஊற்று அமைப்பு மற்றும் பல்நோக்கு பயன்பாட்டு அறைகள் உள்ளன. மற்ற இரண்டு அடித்தளங்கள், கார் நிறுத்தம் மற்றும் இதர சேவைக்கு பயன்படுத்தப்படவுள்ளன.
ஆனந்த் – இஷா திருமணத்திற்கு அஜய் குடும்பத்தாரின் பரிசாக, இந்த பங்களா வழங்கப்படுகிறது.
Discussion about this post