கஜா புயலால் தற்போது வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். படுகாயமடைந்தோருக்கு தலா ரூ. 1 லட்சமும், சிறு காயமடைந்தோருக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
கஜா புயலால் நாகை மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார்.
Discussion about this post