அஜித்தின் படங்களுக்கு எப்போதுமே ஒரு தனி வரவேற்பு இருப்பது வழக்கம். விஸ்வாசம் படத்தில் அஜித்தின் கிராமத்து ஸ்டைலை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கிறார்கள்.
இதற்கு நடுவில் அவரின் அடுத்த படத்தை தீரன் பட புகழ் வினோத் இயக்குகிறார் என்று பேசப்பட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தற்போது அஜித்தின் 60வது படத்தின் கூட்டணி பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தான் அஜித்தின் 60வது படத்தை இயக்க இருக்கிறாராம்.
இப்படத்தை KJR ஸ்டூடியோஸ் தயாரிக்க பாலகுமாரன் எழுதிய ராஜேந்திர சோழன் கதையை மையமாக கொண்டு இப்படம் அமைய இருப்பதாக கூறப்படுகிறது.
Discussion about this post