திரைப்படங்களில் வரும் ஒவ்வொரு காட்சியையும் கவனித்து, அதில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை சென்சார் செய்து அதன் பிறகு தான் திரையிடுவது வழக்கம். ஆனால் அதிக அளவிலான மக்களை சென்றடையும் தொலைக்காட்சி சீரியல்களுக்கு அது மாதிரியான எந்த வித சென்சாரும் இதுவரை இல்லை. இதே நிலை தான் வெப் சீரியல்களுக்கும். இதில் தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களே தாறுமாறாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், வெப் சீரியல்கள் கொஞ்சம் அத்துமீிறி போய்க்கொண்டிருக்கின்றன.
அமேசான் , நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்களில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் இது போன்ற வெப் சீரியல்களில் ஆபாசக் காட்சிகள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன. இதனால் வெப் சீரியல்களுக்கு சென்சார் செய்யும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
இதனால் வெப் சீரியல்களுக்கு சென்சார் வருவதற்கு அதிக அளவில் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. ஏற்கனவே சீரியலில் வரும் காட்சியை பார்த்து தான் கொலை செய்தேன் என சில வழக்குகளின் போது குற்றவாளிகள் தெரிவித்திருக்கின்றனர். இதே சென்சாரை இது போன்ற சீரியல்களுக்கும் கொண்டுவந்தால் பல பிரச்சனைகள் குறையுமே என இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர் தொலைக்காட்சி ரசிகர்கள்.
Discussion about this post