அரசியலுக்கு செல்லும் முன்பு மருமகன் தனுஷின் ஆசையை ரஜினி நிறைவேற்றி வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன், தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று அறிவித்த பிறகு படங்களில் பிசியாக உள்ளார். அடுத்தடுத்து புதுப்படங்களில் நடித்து வருகிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.
பேட்ட படத்தை அடுத்தும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் ரஜினி. அதற்காக முதலில் ஒரு இயக்குனரிடம் கதை கேட்டிருந்தார். அது சரிப்பட்டு வரவில்லை என்பதால் வேறு இரண்டு இயக்குனர்களிடம் கதை கேட்டிருக்கிறார். அதில் யாரின் கதை பிடிக்கிறதோ அவரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினி.
தனுஷ் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் அனைவருக்கும் ஆசை உண்டு. அந்த ஆசை தனுஷுக்கும் உள்ளது. தனுஷ் என்னய்யா மருமகன், அதனால் அவரின் ஆசையை ரஜினி உடனே நிறைவேற்றுவார் என்று நினைத்துவிட வேண்டாம். தனுஷுக்கு இப்படி ஒரு ஆசை இருப்பது ரஜினிக்கு தெரியும்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படத்தை தனுஷ் தயாரித்தார். அந்த படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க அவர் விரும்பினார். ஆனால் ரஜினி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பேட்ட படத்தில் தனுஷ் இல்லை. அரசியலுக்கு செல்லும் முன்பு தனுஷை தன் படத்தில் நடிக்க வைப்பாரா ரஜினி என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேட்ட படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் படத்தில் தனுஷுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ரஜினி அரசியலுக்கு சென்றுவிட்டால் படங்களில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்று இல்லை. கமல் கூறியது போன்று சோறு போடும் தொழிலை செய்து கொண்டே மக்களுக்கு சேவை செய்யலாம்.
Discussion about this post