முட்டை ஒரு சத்தான உணவு என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதிக அளவிலான புரதம் மற்றும் கார்போஹைட்டிரேட் இதில் இருக்கிறது. பொதுவாகவே முட்டையை உடைத்து உணவிற்கு உபயோகப்படுத்திய பிறகு மீதம் உள்ள ஒட்டினை குப்பையில் தான் போடுவார்கள். சிலர் அந்த முட்டை ஓட்டை செடிகளுக்கு உரமாக போடுவார்கள். செடிகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கு தேவையான சத்துக்களும் இந்த முட்டை ஓட்டில் இருக்கின்றன.
முட்டை ஓட்டில் அதிக அளவிலான கால்சியம் இருக்கி்றது. இந்த கால்சியத்தை உணவில் சேர்த்துக்கொள்ளுவதன் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தினை பெறமுடியும். முட்டை ஓட்டினை நேரடியாக சாப்பிடுவது என்பது முடியாத விஷயம். அப்படி சாப்பிடவும் கூடாது. அதற்கு என சில பக்குவப்படுத்தும் முறைகள் இருக்கின்றன.
முதலில் முட்டை ஓட்டினை கொதிக்கும் தண்ணீரில் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு முட்டை ஓட்டினை உலர வைக்க வேண்டும். உலர வைத்த இந்த முட்டை ஓட்டினை பொடி செய்து, பால், மில்க்ஷேக் போன்றவற்றுடன் 1 ஸ்பூன் அளவிற்கு கலந்து உணவில் எடுத்துக்கொள்ளலாம். கேல்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு இது நல்ல மருந்தும் கூட.
Discussion about this post